யாழ் மாவட்டச் செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு, தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மற்றும் தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம் நேற்றையதினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 15ஆம் திகதி நல்லூர் சிவன் ஆலயத்தில் தேசிய தைப்பொங்கல் விழாவும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான தொடர்பான முன்னேற்பாடு குழுக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் மேல திக செயலாளர் இளங்கோவன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது தேசிய சுதந்திர தின நிகழ்வு மற்றும் தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் நிகழ்வு ஒழுங்கமைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது முப்படைகளின் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை