கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி

உலகப்பணக்காரர்களில் ஒருவராகவும் டுவிட்டரின் தலைமை அதிகாரியாகவும் இருந்த எலான் மஸ்க்கிற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது. எதற்காகத் தெரியுமா?

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி | Elan Musk Twitter Ceo Guinness World Record

 

அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து இவரின் பெயர் அடிப்பட்டு வந்தது.

மேலும், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நவம்பர் 2021 இல் $320 பில்லியனில் இருந்து ஜனவரி 2023 வரை $137 பில்லியனாகக் குறைந்துள்ளது.

இந்த இழப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்து இழப்புக்கான உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி | Elan Musk Twitter Ceo Guinness World Record

 

இதுகுறித்து கின்னஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்,”துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், மஸ்கின் மொத்த இழப்பு 2000 இல் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் என்பவருடைய முந்தைய சாதனையை விட அதிகமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்திலும் எலான் மஸ்க் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.