தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்- ஜனனி

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் “வாரிசு” திரைப்படம்.

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படம் ரிலீஸானதுமே, விஜய் தன்னுடைய அடுத்த படமான 67 படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்களாம்.

விஜய்யின் தங்கையாக இணையும் இலங்கை பிக்பாஸ் பிரபலம்! யார் தெரியுமா? | Thalapathy 67 New Update Actor Vijay

மேலும் இந்த திரைப்படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது முடிந்துதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் விஜயின் 67 திரைப்படத்தில் பிக் பாஸில் கலந்துக் கொண்ட முக்கிய போட்டியாளர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த போட்டியாளர் இலங்கையை சார்ந்த ஜனனி நடிக்கவுள்ளராம்.

பிக் பாஸ் வீடு என்பது தங்களை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு கலம். அங்கிருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு ஒரு புது கெரியர் ஆரம்பமாகும் என்பார்கள்.

இந்த வாய்ப்பு தான் ஜனனிக்கும் கிடைத்திருக்கிறது என ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்தேகம் தொடர்ந்து எழுமாக இருந்தால் கூடிய விரைவில் படக்குழுவினர் செய்தியை ஊடகங்களுக்கு அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.