தேயிலை வாங்க கூட அமைச்சில் பணமில்லை -டயானா கமகே

தேநீர் அருந்துவதற்கு தேயிலை வாங்குவதற்கு கூட தமது அமைச்சிடம் பணம் இல்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.

எனவே தமது அமைச்சிற்கு முதலீட்டாளர்கள் வந்தால் வெட்கப்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதோடு, மை, காகிதம், பேனா போன்றவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றார்.

முதலீட்டாளர்களிடம் ஓடர் செய்ய தன்னிடம் பணம் இல்லை என்றும், இந்த நகைச்சுவையை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் வாக்களிக்க தேவையில்லை, மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறிய அவர் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்றார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.