ரிஷாட் பதுர்தினால்  தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது .

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயகே எதிராக தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயக்காவுக்கும்

கிரு தொலைக்காட்சிக்கு எதிராக  100 கோடி (1,000,000,000/-) ரூபா  நஷ்ட ஈடு கேட்டு 2020.07.17 திகதி தாக்கல் செய்த  மனு கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தால் இன்று எடுத்துக்கொள்ளபட்ட து.
வழக்காளியான  ரிஷாட் பதுர்தினால் 2020.05.29 திகதி  ஹிரு  தொலைக்காட்சியில் ஒளிபரப்புப்பட்ட செய்தியில் தனது பெயருக்கு  களங்கம் விளைவிக்கும் விதத்தில்    எஸ் பி திஸ்ஸநாயக்க  கருத்துக்களை தெரிவித்ததை எதிர்த்து எஸ்பி  திஸ்ஸநாயக்கவையும் கிரு தொலைக்காட்சியையும்  எதிராளிகளாக குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார் .

வழக்காளியான  ரிஷாட் பதுர்தீன் வழக்கினை வாபஸ் பெறுவதாக நீதிமன்றுக்கு அறிவித்ததை அடுத்து. இன்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது . இவ்வழக்கில்  எதிராளிகள் சார்பில் கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா ஆஜரானர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.