உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சி -அனுரகுமார
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட்டால் மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களை கூறி அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்துகிறது.
“அவர்கள் திறைசேரி செல்வத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இது நடந்தால் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக திறைசேரியை குறைத்துக்கொண்டே இருக்கிறார்கள்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், திறைசேரி செயலாளர் தேர்தலுக்கு பணம் வழங்க மறுத்தால் அது 3 வருடங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை