கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் – யாழ் மாநகர சபை!

யாழ் மாநகரசபையில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளின் முதன்மை வேற்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் - யாழ் மாநகர சபை! | Local Govt Election Sri Lanka Jaffna Mc Nominators

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

முன்னாள் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மான் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகியான ஆசிரியர் திலீபன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக்கு கட்சி தேர்தலின் பின்னரே முதன்மை வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.