62 ஓட்டங்களில் சுருண்ட டேவிட் வார்னர் அணி!

பிக்பாஷ் லீக்கின் நேற்றைய போட்டியில், டேவிட் வார்னரின் சிட்னி தண்டர்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டதால், இன்னிங்சிற்கு 19 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர் அணி, ஸ்டீவன் ஸ்மித்தின் மிரட்டலான ஆட்டத்தினால் (125) இரண்டு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் கில்க்ஸ் ஒரு ரணிலும், டேவிட் வார்னர் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

டேவிட் வார்னர்/David Warner

அடுத்து களமிறங்கிய வீரர்கள் அபோட், ஓ கீஃபேயின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தண்டர்ஸ் இதனால் அந்த அணி 14.4 ஓவரில் 62 ஓட்டங்களுக்கு சுருண்டு, 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தரப்பில் ஓ கீஃபே 4 விக்கெட்டுகளும், அபோட் 3 விக்கெட்டுகளும், வார்ஷுய்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஸ்டீவன் ஸ்மித்/Steven Smith

62 ஓட்டங்களில் சுருண்ட டேவிட் வார்னர் அணி! | Sydney Sixers Beat Sydney Thunders By 125 Runs

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.