மரண அறிவித்தல்
திருமதி. மின்னல்கொடி இளையதம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
கைதடி நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்ட திருமதி. மின்னல்கொடி இளையதம்பி ( ஓய்வு பெற்ற ஆசிரியர், யா/ கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை) அவர்கள் (22/01/2023) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் கந்தையா, முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் காலம் சென்ற இளையதம்பி கந்தையாவின் ( ஓய்வு பெற்ற அதிபர் யா/ கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை) மனைவியும், தயாபரனின் தாயாரும், காலம் சென்ற சிவபாக்கியம், காலம் சென்ற சரஸ்வதி, காலம் சென்ற மாணிக்கம், காலம் சென்ற அன்னபூரணம், மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவபாக்கியம் ( மணி), காலம் சென்ற தம்பி முத்து ஆகியோரின் சகோதரியும் வேலுப்பிள்ளை, பொன்னையா, தம்பையா, சரவண முத்து, அன்னமுத்து, வேலுப்பிள்ளை, சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்