தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு பெயர் திட்டமிட்டு மறைப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது.
அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை இது திட்டமிட்ட உருமறைப்பு என் நேற்று பிற்பகல் 4 மணிக்கு அன்னாரின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர்முன்னணியின் உறுப்பினர்கள் மேற்படி விடயம் தொடர்பில் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர்.
நேற்று காலை இடம்பெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா பங்குபற்றியிருந்தார். அவர்கூட இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை