9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்
அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நாட்டில் செலவழிக்கப்படும் வரிப்பணத்தில் கிடைக்கும் நன்மைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னெஹெக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை