பெப்ரவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள கட்டணங்கள்
கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் செய்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை