மாணவர்களை கருத்தில்கொண்டு 2 மணித்தியால மின்வெட்டு – பந்துல
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி மின்வெட்டு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் மின்சார துண்டிப்பு இடம்பெறாது. அதேபோல மாலை 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது.
ஆனபோதும் 4 மணிக்கு பிறகும் இரவு வேளையிலும் இரண்டரை மணிநேரம் அன்றி இரண்டு மணித்தியாலங்கள் மட்டும் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் தரத்தில் தோற்றும் மாணவர்களை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயற்படுத்தக்கூடிய முறைமைகள் காணப்படுமானால் அதனை நடைமுறைப்படுத்த நாம் பின்நிற்க போவதில்லை எனவே ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவை இல்லை. ஏனெனில் எங்களுக்கு மக்கள் பிரச்சினைகள் நன்கு தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை