பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்! யாருக்குனு பாருங்க
பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார்.
மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு மற்றும் 16 லட்ச ருபாய் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அஸீம் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப்போகிறேன் என தெரிவித்து இருக்கிறார் அஸீம்.
வீடியோ இதோ..
கருத்துக்களேதுமில்லை