நடக்காத தேர்தலுக்கு ஏன் நங்கூரம் இடுகின்றார்கள்? சிவகுமார் திவியா

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  எதிர்­வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­டுமா?
என்பது எல்லாருடை மனதிலும்  ஏற்பட்டுள்ள கேள்வி

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது.
அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக
எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கின்றது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்று.தேர்தல் ஆணைக்­குழு அறிவித்துள்ளநிலையில்ஒருபக்கம்பொருளாதாரபிரச்சனை
முன்டிக்கொண்டு நின்றாலும் மறுபக்கம் தேர்தல்களம் சுறுசுறுப்பாக தமது வேலைகளை
ஆரம்பித்துள்ளது.

குறிப்­பிட்ட காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடாத்­துவ­தற்கு தேர்தல் ஆணைக்­குழு தயா­ரா­கி வருகின்றது.
­இது தேர்தல் ஆணைக்­குழுவின் கட­மை­யாகும். நாட்டு மக்­களின் வாக்­கு­ரிமை தொடர்பில் கடந்த­ காலங்களில்­
நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்­பு­க­ளின்­படி தேர்­தலைப் பின்­தள்­ளுவ­தற்கு நீதி­மன்றம் சந்­தர்ப்பம் வழங்­காது­
என்று தேர்தல் ஆணைக்­குழு நம்­பிக்கை வைத்­துள்ளது”

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பஞ்சம் நிலவி வருவதால், அத்தியவசிய தேவையான
உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பது அந்நாட்டு மக்களின் இயல்பு
வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய வைத்திருகிறது.  ஒரு கிலோ அரசியின் விலை 200
ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. ஒரு முட்டையின் விலை 55 ரூபாய்க்கும், பெட்ரோல்
, டீசலின் விலை 450 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 50 சதவீத
ஹோட்டல்கள் மூடப்பட்டிருப்பதுடன்,  கொழும்பு உட்பட அனைத்து மாவட்பங்களும் பல
மணி நேரம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?
இவ்வாறானசூழ்நிலையிலும்  நடைபெறாத  உள்­ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக
மார்ச்  மாதம்நடைபெறும்என்ற எதிர்பார்ப்பில்தேர்தல் கூட்டணிகள் குறித்த
பேச்சுவார்த்தைகள்,உடன்பாடுகள் தொடர்பாககட்சிகள்அனைத்தும் தேர்தல் வேலைகளை
துவங்கியுள்ளன. வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கானமுதலாவது
கட்டுப்பணம் நேற்று  மாலை செலுத்தப்பட்டது.  இவ்வாறு   ஒரு பக்கம், தேர்தல்
களம் சுறுசுறுப்பாகவே களைகட்டுகின்றது.ஆனால் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது இதனால்  மனிதவாழ்க்கை நெருக்கடி என்ற நிலையை எட்டியள்ளது.
முக்கியமான உணவுப் பொருள், எரிபொருள், அத்தியாவசிய
மருந்துகள் என அனைத்து நுகர்பொருள்களுக்கும் தட்டுப்பாடு, பயங்கரமான
உணவுப்பொருள் விலையேற்றம்,, முதலீடுகள் முடக்கம், அமைதியிழந்து வீதிக்கு வந்து
போராடும் மக்கள்..  இவ்வாறான சூழ்நிலையில  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்
சாத்தியமாகுமா?   வரலாற்றில் கடந்த மூன்று வருட காலமாக மக்கள் அனுபவித்த
துன்பதுயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உயிரிழப்புகள், வறுமை, தொழில்வாய்ப்பின்மை
என்றெல்லாம்  மக்கள் விபரிக்க முடியாத துன்பங்களை கடந்த சுமார் மூன்று
வருடங்களாக அனுபவித்து வருகின்றனர் என்பது நம் எல்லோருக்குமே நன்கு அறிந்த
தெரிந்த  உண்மையே

எமது நாடு அனைத்து வழியிலும் பொருளாதார நிலைமை தற்போது சீராக இல்லை. செல்வந்த
நாடுகளும் கூட தற்போது பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலைமையிலேயே உள்ளன என்பதுதான்
உண்மை.  இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. கடந்த ஒரு சில வருடத்திற்கும்
மேலாக இதுகுறித்த எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் அன்று
இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் நிகத்திய பெரும் குண்டுவெடிப்புத் தாக்குதல்
இந்த சீரழிவுத் தொடரின் முதல்கண்ணி. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் இயங்கும்
சுற்றுலாத் துறை இலங்கையின் பொருளாதாரத்திற்கு 15%க்கும் மேலாக பங்களிக்கும்
துறை இது இதனால் முற்றிலும் முடங்கிப்போய்னது    அடுத்ததாக  இவ்வாறான
சூழ்நிலைக்கு இரண்டாவது பெருங்காரணம் உலகப்பெருந்தொற்றான கொவிட் வைரஸின் பரவல்
ஆகும். சீனாவில் முதன் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று அதன் பின்னர்
படிப்படியாக உலகநாடுகள் எங்குமே பரவி  எமது நாட்டையும் விட்டுவைக்க வில்லை
இதனால் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்.    இலங்கை இப்படி அதாள பாதாளத்திற்கு
சென்று கடனில் சிக்கித் தவிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து
கொள்வதற்கு முன்பு, எப்படியெல்லாம் இலங்கைக்கு வருமானம் கிடைத்தது? ஏன் இப்போது
வரவில்லை என்பது குறித்தும் பார்க்க வேண்டியது அவசியம். இலங்கையின் வருமானம்
என்பது அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், தேயிலை மற்றும் சுற்றுலா இதன்
மூலம் தான் அதிகளவு கிடைக்கிறது. இந்த மூன்றை நம்பியே இலங்கை மக்கள் இருந்து
வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா, இலங்கையை
மட்டும் விட்டு வைக்குமா என்ன? கொரோனாவின் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்த
இலங்கை உட்பட பல நாடுகளும் சர்வதேச போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.
இதனால் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தேயிலை, ஆடைகள் தேங்க
ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு, ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டதால் சுற்றுலா துறை முற்றிலும் முடங்கியது இவ்வாறு இலங்கையில்
. அடுத்தடுத்து வந்த கோவிட் தொற்று அலைகளால் மரண அடி வாங்கியது. அதே ஆண்டில்
ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்த அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும்,
நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ
எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது – வரி
விகிதங்களை அபாயகரமான அளவுக்குக் குறைத்தல், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட
மானியங்கள் சலுகைகள், அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம் என்ற குறுகிய
நோக்கில் உரங்களின் இறக்குமதிக்குத் தடை, அதனால் ஏற்பட்ட வேளாண் விளைபொருள்
உற்பத்தி வீழ்ச்சி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் சிகரம்
வைத்தது போல, இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர
சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள்,
வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி
பிதுங்கி நிற்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து
அதீதமான சலுகைப் பொருளாதாரம் என்பதை நோக்கிச் சென்ற அன்றைய அரசின்
கேனத்தனத்திற்கு இலங்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய விலை இது.

ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து போனது ஒருபுறமிருக்க, பொருளாதாரமே
அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. தனிநபர் பொருளாதாரம் மாத்திரமன்றி,  தேசிய
வருமானமே வீழ்ச்சிக்கு உள்ளானது. கொவிட் தொற்றின் பரவுதலில் இருந்து
படிப்படியாக மீண்டெழுந்து கொண்டு வரும்போதுதான் பொருளாதார நெருக்கடிகளும்
தோற்றம் பெற்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இவ்வாறு
எல்லா நாடுகளும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்து
பொருளாதாரத்தில் சற்று பின்னடைவுக்கு தள்ளப்பட்டாலும்,  எமது நாட்டிற்கு வரும்
வருமானத்திற்கான அனைத்து கதவுகளும்  மூடப்பட்டதால், நம்நாட்டின் பொருளாதாரம்
பிற நாடுகளை காட்டிலும் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் அன்னிய
செலாவனி கிட்டத்தட்ட 1.பலபில்லியன் டாலராக குறைந்து விட்டது. இலங்கைக்கான வரவு
குறைய குறைய, மத்திய கையிருப்பில் இருந்த அன்னிய செலாவனியும்
வீழ்ச்சியடைந்ததால், பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இலங்கை. இதற்கும்
விலைவாசிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அன்னிய செலாவனியின் இருப்பு
குறைந்ததால்,  இலங்கை மத்திய வங்கியானது ரூபாயின் மதிப்பை குறைத்திருக்கிறது.
இதனால் பொருட்களின் விலை படிப்படியாக ட ஙஉயரத் துவங்கியிருக்கிறது. ஒரு
டாலருக்கு இலங்கைய

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.