நடிகை விஜயலட்சுமி வழக்கில் கைதாகிறாரா சீமான்?
2020 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் தனது கட்சிக் கூட்டத்தில் தன்னை அவதுாறாக பேசுவதாக புகார் அளித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுங்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே 81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் எஞ்சினியர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பாஜக மீனவர் அணித் தலைவ முனுசாமி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சங்கர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.பி.மணி, அனைத்து மீனவர்கள் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, சட்டப்பஞ்சாயத்து இயகக்த்தின் அருள் முருகானந்தம், இளங்கோ, சமூக செயற்பாட்டாளர் முகிலன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோ பங்கேற்றனர்.
கூட்டத்தில் சீமான் பேசும் போது எதிர்ப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. அப்போது பேசிய சீமான் நினைவுச் சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
அப்படி கடலுக்குள் வைத்தால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு வரும் கடலுக்குள் பேனா வைப்பதற்கு கல்லையும், மண்ணையும் கொட்ட வேண்டும். அப்படி கொட்டும் போது அழுத்தம் ஏற்படும். இதனால் கடலில் உள்ள பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். உங்களை கடற்கரையில் புதைக்கவிட்டதே (கருணாநிதி உடலை) தப்பு.
நீங்கள் இப்போது பேனாவை வையுங்கள். ஒரு நாள் நான் வந்து உடைகிறேன் பார். பேனாவை கடலுக்குள் தான் வைக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனாவை அண்ணா அறிவாலயத்திலோ அல்லது நினைவிடத்திலோ வைக்க வேண்டியது தானே.
கடலுக்குள் வைப்பதால் 13 மீனவ கிராம மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம். அதை தடுக்கும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம்.இது உறுதி என்று பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுகவினர் எதிர் குரல் எழுப்பினர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவினர் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சவுக்கு சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் சீமானின் பேச்சு ஆளுங்கட்சியை கொதிப்படையை செய்துள்ளது. நடிகை சார்பில் தரப்பட்ட பாலியல் புகார் நீண்டநாளாக நிலுவையில் உள்ள நிலையில் அதற்காக கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை