இன்றைய ராசிபலன் 4 பிப்ரவரி 2023

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம்  உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.  கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.  மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாக வாய்ப்புண்டு. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் காரியம் அனுகூலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.  மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த வேண்டிய உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. அம்பிகை வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் உரிய கவனம் தேவை. திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக்  கடைப்பிடிக்கவும்.  தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஆலோசிக்கலாம். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சூடுபிடிக்கும். லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற் பகலுக்கு மேல்  உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள்  ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டியாளர்களால் தொழிலில் சிறு நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

உத்திராடம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பழைய சரக்குகளை விற்றுத்தீர்க்க வாய்ப்புகள் உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு  வாய்ப்பு உண்டு.

கும்பம்

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார் கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.  எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வசூலாக வாய்ப்புண்டு. சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமை காட்டாமல் இன்முகத்துடன் பேசுவது நல்லது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத்  தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.