மீண்டும் யாழ் செல்லவுள்ள ரணில் – விசேட கூட்டம் இன்று
ரணில் விக்ரமசிங்க யாழ். விஜயம் தொடர்பிலான முன்னேற்பாடு பற்றிய விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (09) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ரணில் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடு பற்றியயே கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, அதிபரின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை