பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர்
பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் இந்த சந்திப்பு நடைபெறுகிறதுபிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர்.
உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையி ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால்
இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.