அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சை ஒத்திவைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நிதிப்பற்றாக்குறையினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் அதற்குரிய அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல.
ஒளடதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதியில்லாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை