உயிரைக் காப்பாற்ற நாட்டை விட்டு ஓடும் கோழையல்ல எங்கள் அண்ணன் – சீமான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ. நெடுமாறன் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்துள்ளார்.

“நாட்டை விட்டு போக மாட்டேன் என நாட்டுக்காக சண்டை செய்த மாவீரன் பிரபாகரன், மக்களையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு நாட்டை விட்டு ஓடும் கோழையல்ல அவர்”

இவ்வாறு, ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு பேரழிவை தமிழ் இனம் சந்தித்த பிறகும் 15 ஆண்டுகள் பதுங்கி எதையும் பேசாமல் இருக்கிறார் என நினைக்கிறீர்களா?

சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன், வந்துவிட்டு தான் சொல்லுவார், அதுதான் அவரது செயல் அது அவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும்.

சொல்லை செயலில் காட்ட வேண்டும் என எங்களுக்கு கற்றுத் தந்தவரே அவர்தான், அதனால் தேவையில்லாமல் குழப்பமடையாதீர்கள்.

ஐயா. பழ நெடுமாறன் சொன்னதைப் போல அவர் உயிருடன் வந்தால் அதன் பின்னர் அதைப்பற்றி நாங்கள் பேசலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.