சுயேச்சைக் குழுக்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்

நாட்டு மக்களை ஏமாற்றி சுயேச்சைக் குழுக்கள் எனக் கூறிக்கொண்டு எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் ஒன்றேனும் சஜித் பிரேமதாஸவின் குழுக்கள் அல்ல எனவும், சஜித் பிரேமதாஸவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான அணி மட்டுமே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போராட்டத்தின் மூலம் நாட்டை அழித்த நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் விரட்டியடிக்கப்பட்ட போதிலும் இறுதியில் இவர்களின் கைப்பாவையே ஜனாதிபதியாகி மக்களை மேலும் அநாதரவாக்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், அகிம்சைப் போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகத்தைக் கோரிய போதும், அந்தப் போராட்டத்தின் போர்வையில் சிலர் பயங்கரவாதத்தை முன்னெடுத்தனர் எனவும், ஆனால் போராட்டத்தின் பெரும்பகுதி அமைதியான உன்னத நோக்கங்களைக் கொண்ட இளைஞர்களைக் கொண்டிருந்தது எனவும், புதிய ஜனநாயக ஆட்சியை உருவாக்க நினைத்தாலும், இறுதியில் ராஜபக்சவின் பினாமி ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகி நாட்டு மக்களை இன்னும் மோசமான வாழ்க்கைக்கு இழுத்துச் சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களை இவ்வாறு அவல வாழ்க்கைக்கு இட்டுச் சென்ற யானை, காகம் மொட்டுக் கூட்டணி தற்போது சுயேச்சைக் குழு ஊடாக மக்களை மீளவும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த சுயேச்சைக் குழுக்களில் ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளடங்கவில்லை என்பதனால், இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

கெகிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.