பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர்தான்! போட்டோ வெளியாகி வைரல்
ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலமாக பாப்புலர் ஆன நடிகை ஆயிஷா, அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.
அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும் அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஆயிஷா அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறி இருக்கிறார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை