தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு – உத்தியோகபூர்வ அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.