சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் ஒப்பந்தம்!

சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க நாட்டின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர், எயார் இந்தியா நிறுவனம், 470 விமானங்களை வாங்க எயார் பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதேபோல் இண்டிகோ நிறுவனம், சுமார் 500 விமானங்களை வாங்கவுள்ள நிலையில், ஆகாசா, கோ பர்ஸ்ட், விஸ்டாரா உட்பட ஒட்டுமொத்த நிறுவனங்களும் சுமார் 1,115 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதற்கமைய, அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவிற்கு 2,210 புதிய விமானங்கள் தேவைப்படுமென போயிங் நிறுவனம் கணித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.