வாக்குரிமையை பறிப்பது மனித உரிமை மீறலாகும் அங்கஜன் தெரிவிப்பு!
யாழ்.கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 44 வது ஆண்டு விழாவும், அரங்கத் திறப்பு விழாவும் இன்று மாலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா வாமதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,தேர்தல் ஆணையகம் சொல்லியிருக்கிறது தேர்தலை நடத்துவதற்கு தேவைப்படுகிற பணம் இல்லை, தேவைப்படுகிற வசதிகள் இல்லை என அறிவித்திருக்கிறார்கள் இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் முதலில் மக்கள் கேட்கவில்லைஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒரு தேர்தலை நடத்திய
தீர வேண்டும் ஆனால் இன்றைக்கு நடத்த விடாமல் ஒரு தரப்பினர் அதை பின்னுக்கு போடுவதற்கு மிகப்பெரிய வேலை திட்டத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த தேர்தலுக்கான பணம் கொடுப்பதில்லை மக்களுடைய வாக்குரிமையை மக்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல விடாமல்
தேர்தலை பிற்போடுகிறார்கள் என்றால் இந்த தேர்தலின் முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக அமையும் என்ற அச்சம்.
ஆனால் ஒரே ஒரு விடயத்தை எடுத்து சொல்ல விரும்புகின்றேன் கடந்த கால வரலாறு ஒன்றைச் சொல்கின்றது தேர்தல்தலை பிற்போட்டவர்கள் அதற்கு பிறகு வந்த தேர்தலில் வென்றதே இல்லை சரித்திரத்தின் அடிப்படையில் ஆகவே மக்களுக்கான வாக்குரிமையை பறிப்பது ஒரு மனித உரிமை மீறல் மக்களுக்கான தேர்தலை வாய்ப்பை தட்டிப் பறிப்பது ஒரு மனித உரிமை மீறல் என்பதனை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
கருத்துக்களேதுமில்லை