ஹொரணை ஒலபொடுவ ரஜமஹா விகாரை வருடாந்த நவம் மஹா பெரஹரா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹொரணை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, தலகல விபஸ்ஸனா தியான நிலையத்தின் தலைவர் ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண, உடுவே ஹேமாலோக நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின், விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன், தேரருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 2023 நவம் மஹா பெரஹராவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி விசேட நினைவுக் குறிப்பையும் இட்டார்.

அதனையடுத்து, தாது மண்டபத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மதவழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். நவம் மஹா பெரஹரா நிகழ்வையொட்டி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி முப்பத்தேழு மணிநேர பிரித் உபதேசமும் விகாரையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஸ்ரீசுமங்கலதர்ம பாடசாலையின் பிள்ளைகளுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபொடுவ ரஜமஹா விகாராதிபதி இத்தாலி மிலானோ நகரத்தின் லங்காராமாதிபதி ஒலபொடுவே தம்மிக தேரர் உட்பட மகாசங்கத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.