கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வுகளைகாண புதிய ஒப்பந்தம் – அலி சப்ரி

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு அனுமதிப்பத்திர முறைமையை உருவாக்கும் யோசனை இருப்பதாகவும் அது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வுகாண வெளிவிவகார அமைச்சு தலையிட வேண்டும் என சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.