இலங்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காமால் போகும் வாய்ப்பு! விஜித ஹேரத் எச்சரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற எந்தவொரு சர்வதேச ஆதரவும் இலங்கைக்கு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமை அரசாங்கத்துக்கு இன்னும் மோசமாக இருப்பதால் அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைத்துள்ளது என்றும் இது ஜனநாயகத்துக்கும் மக்களின் வாக்குரிமைக்கும் கடுமையான அச்சுறுத்தல் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை