வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் களுத்துறை சுற்றுலா விடுதியில் மீட்பு!

களுத்துறை வடக்கு சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டுகுருந்த முகாமுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான முப்பது வயதுடைய சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.