யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கழிவுகள் தேக்கமாம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாள்களாகத் தேங்கி கிடக்கின்றன என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பையன் மணல் பகுதியில் யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஓர் உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்தத் தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த கோம்பையன் மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என குறித்த விடயம் தடைப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடக்கின்றன என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.