வவுனியா வைத்தியசாலையில் பல கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தை அதிகரி , வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தைக் குறை , ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டம் பேரணியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சுற்றுவட்டத்தினூடாக ஏ9 வீதியிலுள்ள வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்து அதன் வாயிலில் முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.