442 மில்லியன் முதலீட்டில் மன்னார் , பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அதானி நிறுவனத்திற்கு அனுமதி
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 44 கோடியே 20 லட்சம் டொலர் முதலீட்டில் 350 மெகாவோல்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை முதலீட்டு சபையால் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் அமைச்சில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1500 – 2000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. இந்நிலையிலேயே அதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவடைச் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இதனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மன்னாரில் அமைக்கப்படவுள்ள மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 250 மெகாவோட் மின் அலகும் , பூநகரியில் அமைக்கப்படவுள்ள மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 100 மெகாவோட் மின்அலகும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை