தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டாலும் வரிக்கொள்கையில் மாற்றங்களை செய்யப்போவதில்லை – செஹான்
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் அரசாங்கம் வரிக்கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாது என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது புதிய வரிக்கொள்கையை மாற்றவேண்டும் என தொழிற்சங்கங்களும் தொழில்சார் அமைப்புகளும் காலக்கெடு விதித்துள்ள நிலையிலேயே இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், அரசாங்கம் தனது வரிக்கொள்கைகளில் எந்த மாற்றத்தினையும் செய்யாது என குறிப்பிட்டுள்ளார்.
வரிதொடர்பான புதிய அறிவிப்புகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள சிலர் வரிகளை செலுத்தவேண்டிய நிலையில் இல்லாதவர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வருமானம் ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவு அவர்கள் அரசியல் நோக்கம் உடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை