கல்வியமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வசந்த முதலிகே உட்பட 56 பேர் கைது
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தினை மீள திறக்குமாறு வலியுறுத்தி கல்வி அமைச்சிற்குள் நுழைந்த பௌத்த தேரர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர்கள் அமைச்சிற்குள் கல்வி அமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்நிலையிலேயே அத்துமீறி அங்கு பிரவேசிக்க முற்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை