அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல் தடவையாக இன்று முன்தினம்) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் பெயரை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமார முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அளுத்கமகே அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்  இரான் விக்ரமரத்னவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பேராசிரியர்  ரஞ்சித் பண்டாராவுக்கு 17 வாக்குகளும், இரான் விக்ரமரத்னவுக்கு 06 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னர் மேற்கொள்ளப்பட்ட குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்ததுடன், குழுவின் உறுப்பினர்கள் இதற்கு இணங்கினர்.

கோப் குழுவின் பரிந்துரைகளுக்குக் காணப்படும் சட்டபூர்வமான பிணைப்புக்கள் தொடர்பான செயன்முறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி  சபாநாயகர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான  ஜகத் புஷ்பகுமார, ஜானக வக்கும்புர,  லொஹான் ரத்வத்த,  இந்திக அநுராத ஹேரத்,  டி.வி.சானக,  ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான  ரவூப் ஹக்கீம்,  அநுர பிரியதர்ஷன யாப்பா,  மஹிந்தானந்த அளுத்கமகே,  தயாசிறி ஜயசேகர,  ரோஹித அபேகுணவர்தன,  இரான் விக்ரமநாயக,  நிமல் லன்சா,  எஸ்.எம்.எம்.முஷாரப், நளின் பண்டார ஜயமகா, சமிந்த விஜயசிறி,  சஞ்ஜீவ எதிரிமான்ன,  ஜகத் குமார சுமித்திராராச்சி,  (மேஜர்)

சுதர்ஷன தெனிப்பிட்டிய,  சாணக்கியன் இராசமாணிக்கம், ரஜிகா விக்ரமசிங்க, மதுர விதானகே மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.