தேர்தல் இடம்பெறும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு
தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கு 09.03.2023 அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்ட பணிகள் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கருத்துக்களேதுமில்லை