ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டதில், பயணியொருவர் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அநுராதபுரத்தின் பூனேவ பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கடந்த வியாழக்கிழமை யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிய சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை சோதனையிட்டபோதே, சந்தேக நபரிடமிருந்து ஒன்றரை கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.