இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் பகுதிகளில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.