ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல – யாழ். மாவட்ட செயலாளர்!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நீல வர்ணம் பூசப்பட்டு இருக்குமாயின் அது உடனடியாக அகற்றப்படும் என யாழ். மாவட்ட செயலாளர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்துக்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் –
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு அலுவலகமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல.
ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். – என உறுதி அளித்தார்.
கருத்துக்களேதுமில்லை