மகளின் எடைக்கு ஈடாக தங்கத்தை சீராக கொடுத்த தந்தை! இணையவாசிகளை வாய்பிளக்க வைத்த சம்பவம்
திருமணம் என்று வந்துவிட்டால், அங்கு சீர்வரிசை என்ற பெரும் செலவும் ஏற்பட்டுவிடுகின்றது. இதனாலே பெண்கள் திருமணத்தின் போது பல மனக்கஷ்டங்களை சந்திக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்தே பெண்ணையும் கொடுத்து வருகின்றனர். இதே சம்பவம் துபாயிலும் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஒருவர், தனது மகளின் திருமணததில் அவரின் எடைக்கு ஏற்ப தங்கத்தை சீர்வரிசையாக கொடு்த்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுது்தியு்ள்ளது.
அங்கிருந்த பிரம்மாண்ட தராசில் ஒருபுறம் இளம்பெண் அமர்ந்திருக்க அவருக்கு அடுத்துள்ள தட்டில் தங்க கட்டிகள் அடுக்கப்படுகின்றன. இதனை அந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் திகைத்துப்போய் பார்க்கின்றனர். இந்த வைபவத்தில் சுமார் 70 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சுப்பொருளாக அமைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை