கொழும்பில் நிறுவனமொன்றின் காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கொழும்பிலுள்ள நிறுவனமொன்றின் காசோலைகளை பயன்படுத்தி 53 லட்சத்துக்கும் அதிக பண மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அதே நிறுவனத்தில் தொழில் புரிபவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி நிறுவனத்தின் கணக்காளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குற்றத்தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடைய மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.