உக்ரைனின் வெற்றி இவர்கள் கைகளில் தான்… சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்ய துருப்புகளை உக்ரைன் மண்ணில் இருந்து ஓடவிட வேண்டும் என்றால் மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இருபக்கமும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த போரானது 2022 பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது.
அதற்கு முன்னரே, ரஷ்யாவின் இந்த போக்கு தொடர்பில் அமெரிக்கா பலமுறை எச்சரிக்கையும் விடுத்து வந்தது. உக்ரைன் எல்லையில் துருப்புகளை குவித்து வந்த ரஷ்யா, படையெடுப்பை முன்னெடுக்கும் என அமெரிக்கா உட்பட சில நாடுகள் தவிர்த்து எவரும் நம்பவில்லை.
இதன் காரணமாகவே, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஓராண்டு நிறைவு நாளில் ஊடகங்களில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளுக்கு மேல், மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே, உக்ரைன் வெற்றியை இலகுவாக தொட்டுவிடும் என்றார்.
நமது நட்பு நாடுகளும் ஆதரவு நாடுகளும் தங்கள் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றினால் போதும், நமது வெற்றி தொட்டும்விடும் தூரந்தான் என்றார். நமது பணிகளை நாம் சரிவர செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, வெற்றி என்பது வெகு தொலைவில் இல்லை எனவும் நம்பிக்கை ஊட்டினார்.
கருத்துக்களேதுமில்லை