10 வயதுடைய சிறுவனை காணவில்லை – உதவிகோரும் குடும்பத்தினர் !

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை காணாமற் போயுள்ளார் என இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 05 மணிக்கு பிரத்தியோக வகுப்புக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் இந்தச் சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற டெனிம் காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்தார் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்துக்கு 052 2265 222, மற்றும் 076 366 6106 என்ற தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிஸார் கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.