கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர அரசியல் செய்கின்றனர் – பிரதமர் மாற்றம் தொடர்பில் சாகர கருத்து
பிரதமரை மாற்றுவது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர அரசியல் செய்கின்றனர் என்று பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலளார் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு பொதுஜனபெரமுனவினர் முயற்சிகளை முன்னெடுப்பதாக பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியுள்ள ஓர் அணியினர் தற்போது அநாதரவாக நிற்கின்றார்கள். அவர்கள் தமது அரசியலை வளர்த்துக்கொள்ளவும், அன்றாட பிரபல்யத்துக்காகவும் வௌ;வேறு சூட்சுமங்களைக் கையாள்கின்றார்கள். அதிலொன்று தான், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கு முனைகின்றோம் என்ற கருத்தாகும்.
சன்ன ஜயசுமன, தமது அரசியலில் இருப்பு கேள்விக்குறியாகிவுடன், கட்சியையும், அதன் மூத்த அங்கத்தவர்களையும் வைத்து புனைகதைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
அவர் தமது இயலாமையால், மூன்றாந்தரமான அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்.ஆகவே, சன்ன ஜனசுமான எம்.பி. இடத்தில் யாராவது அணுகியிருந்தால் அதுபற்றிய முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை