லால்காந்தவும் , சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு வாக்குமூலம் கொடுக்கவில்லை இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா? ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சவால்!

வசந்த முதலி விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும்   பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும்  ஹதுன்நெத்தியிடமும்  பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என  முடிந்தால் அனுர  பதில் சொல்லட்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
திஸ்ஸமஹாராம தொகுதி மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்
2009 அல்லது 2010 இல் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்தேன். அன்றும் நான் ஜே.வி.பி பற்றிப் பேசினோம். இன்று பெருந்தொகையான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது.  ஜனநாயகம் பற்றி அநுரவின் கட்சியால் மாத்திரம் தான் பேச முடியுமா? அவ்வாறு நினைத்துத் தான் அவர் செயற்படுகிறார்.அவர் அவதூறு பேசலாம், பொய் சொல்லலாம், கூட்டங்கள் நடத்தலாம், ஆனால், கூட்டம் நடத்தி, நாம் ஏதாவது  சொன்னால், அனைவரும் தம்மைக் குறை சொல்வதாக கூறுவார்.
மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என்பதாலேயே இந்நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.  அவரை தெற்கிலர் இருந்து தான் பாராளுமன்றம் அனுப்பினீர்கள்.  தெற்கு மக்களுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
2005 இல் 180,000 வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 இல் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆற்றிய பணியினால் தான் நாங்கள் வீதிகளை  நிர்மாணித்தோம். அவரின் ஆட்சியில் தான் நெடுஞ்சாலைகளை அமைத்தோம்.  இப்போது ஜே.வி.பிக்கு  மூன்று நான்கு மணித்தியாலங்களில் கதிர்காமம் செல்லக்கூடிய நெடுஞ்சாலைகளை அமைத்தது அவர்தான்.
காலிமுகத்திடலில் வைத்து அடி, கொல்லு என்று  அநுர திஸாநாயக்க கூறினார். பிரதமர் அலுவலகத்தை பிடித்தனர்.ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர்.பிரதமரின் இல்லத்தை  தீயிட்டு பாராளுமன்ற சந்திக்கு சென்று   லால்காந்த  என்ன சொன்னார்.  பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க சொன்னார். வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.  ஆனால்   சுனில் ஹதுன்னெத்தியோ அல்லது லால்காந்தாவோ பொலிஸில் சென்று வாக்குமூலம் கொடுக்காது தப்பினர்.  இதற்கு  அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா?.அனுர உண்மையான டீல்காரர். வசந்த மட்டும் சிறைக்கு சென்றார். லால்காந்தவும்  சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு கூட செல்லவில்லை.முடிந்தால் இதற்கு பதில் சொல்லட்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.