விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புதொடர்ந்தும் இயங்குகின்றது – அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட பயங்கரவாதம் தொடர்பான 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 இல் இலங்கை அரசாங்கத்தால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009 முதல் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பாடின்றி உள்ளது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் இல்லை எனவும் அமெரி;க்கா தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.