பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் நடைபெறும் மாநாட்டிற்கு ஜீவன் பயணம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று மேற்கொள்கின்றார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் (Raisin Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகின்றார். மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதிவரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.