மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிராகரிக்க அவர் கோரியிருந்தார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நீதியரசர்களான சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய இருவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.