ரவி கருணாநாயக்க மீதான பினைமுறி மோசடி வழக்கு – மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட இரண்டு பிணைமுறி ஏலங்களில் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நிரந்தர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தி ரவி கருநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டின் 2 ஆவது பிணைமுறி மோசடி வழக்கில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 10 குற்றவாளிகளை விடுவிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற கடந்த மார்ச் 4 ஆம் திகதி உத்தரவிட்டது.
கருத்துக்களேதுமில்லை